மோசடி
தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் "டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்", தரவு உள்ளீட்டாளர் வேலை, "அதிக சம்பளம்" என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது.
தூதரகங்களை தொடர்பு கொள்ளுதல்
இனிவரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் "அயலக தமிழர் நலத்துறை" அல்லது "குடிப்பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் சென்னை" அல்லது "சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொண்டும், மத்திய அரசின் வெளியுறவு துறை அல்லது வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இணையதள முகவரி
இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 9042149222 மூலமாகவும் poechannal1@maa.gov.in, poechannal2@maa.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். மேலும், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்பு உதவி மையத்தின் 18003093793, 8069009901, 8069009900 என்ற எண்களை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.