திருட்டு வழக்கில் தம்பதி உள்பட 4 பேர் கைது 40 பவுன் நகைகள் மீட்பு




திருட்டு வழக்கில் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

திருட்டு சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், விராலிமலை, இலுப்பூர், காரையூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிகம் நடைபெற்றது. இதில் வீடுகளில் வைத்திருந்த நகைகள் திருட்டு போனது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். இதில் அவர்கள் மதுரை அரசடியை சேர்ந்த நாடாச்சி என்கிற லதா (வயது 40), அவரது கணவர் ராமு, மதுரை ஆரப்பாளையத்தை சோ்ந்த கார்த்திக்ராஜா (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருடிய நகைகளை மதுரை பெரியார் நகரை சேர்ந்த சாமுவேல் (42) என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

பாராட்டு

இதேபோல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைதான 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments