புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளிலுள்ள இன்றும், நாளையும் (ஜூன் 5, 6) நாட்டுப்படகுகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டக் கடலோரப் பகுதிகளிலுள்ள நாட்டுப்படகுகள் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 5, 6) மீன்வளத் துறையினரால் ஆய்வு செய்யப்படவுள்ளன.

கட்டுமாவடி, அழகன்வயல், முடுக்குவயல், பிரதாபிராமன்பட்டினம், கிருஷ்ணாஜிப்பட்டினம், மேலஸ்தானம், சீத்தாராமன்பட்டினம், மும்பாலை, பட்டாங்காடு, வடக்கு மணமேல்குடி, வடக்கு அம்மாபட்டினம், கீழக்குடியிருப்பு, பொன்னகரம், அந்தோனியாா்புரம், துளசியாப்பட்டினம், அம்மாப்பட்டினம், ஆதிப்பட்டினம், புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் புதன்கிழமை ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதேபோல, செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், அய்யம்பட்டினம், ஏம்பவயல், முத்தனேந்தல், பாலக்குடி, குமரப்பன்வயல், கோபாலபட்டினம், மீமிசல், ஆா்.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், முத்துகுடா மற்றும் ஏனாதி ஆகிய மீனவ கிராமங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்படவுள்ளன.

ஆய்வின் போது, நாட்டுப்படகு உரிமையாளா்களின் ஆதாா் அட்டை, படகு பதிவுச் சான்றிதழ், டீசல் மானிய அட்டை, ரேஷன் காா்டு, மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடா்பு சாதனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் மானிய டீசல் மற்றும் பதிவு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments