இராமநாதபுரத்தில் 2-வது முறையாக வெற்றிக்கொடி நாட்டிய நவாஸ்கனி! 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடித்தார்இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி 1,66,782 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2-ம் இடத்தை பிடித்தார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்று முடிந்தது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, கொமதேக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிட்டார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என கணித்தன.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி எம்.பி. இந்த தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டார். பா.ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இவர்களைத்தவிர அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சந்திரபிரபா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். இதுதவிர சுயேச்சையாக பன்னீர்செல்வம் பெயருடைய 5 பேரும் களத்தில் இருந்தனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த தொகுதியில் போட்டியிட்டதால், தமிழகத்தின் கவனம் ஈர்த்த தொகுதியாக இராமநாதபுரம் தொகுதி இருந்தது.

நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நவாஸ்கனி எம்.பி. முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் இருந்து கடைசி சுற்று முடியும் வரை மற்ற வேட்பாளர்களை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் 2-வது இடத்திலேயே வந்தார்.

25 சுற்றுகள் முடிவில் நவாஸ்கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 3,42,882 வாக்குகள் பெற்ற ஓ.பன்னீர்செல்வம் 2-வது இடம் பிடித்தார். இதன் மூலம் நவாஸ்கனி 1 லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் சந்திரபிரபாவும் முறைேய 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்தனர். இவர்கள் இருவர் உள்பட இந்த தொகுதியில் போட்டியிட்ட 23 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

நவாஸ் கனி (469943 வாக்கு) அவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் BJP சார்பாக போட்டியிட்ட நைனார் நாகேந்திரனை (342821 வாக்கு) 127,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2024-ஆம் இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விட 39,660 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு சதவிகிதத்தில் 2019-ஆம் தேர்தலை (44.08%) விட இந்த தேர்தலில் 1.84% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் வாக்குகள் விவரம்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்: 16,17,688
பதிவானவை: 11,06,838S.N.

வேட்பாளர்கள்

கட்சி

EVM வாக்கு

தபால் வாக்கு

மொத்த வாக்கு

% சதவி

1

நவாஸ்கனி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

506690

2974

509664

45.92

2

ஓ.பன்னீர்செல்வம்

பா.ஜனதா அணி சார்பில் சுயே

340778

2104

342882

30.89

3

ஜெயபெருமாள்

அ.தி.மு.க

98757

1023

99780

8.99

4

DR.சந்திரபிரபா

நாம் தமிழர்

96701

971

97672

8.8

5

முவித்குமார்

சுயேட்சை

7901

18

7919

0.71

6

செந்தில்மல்லர்

சுயேட்சை

6629

198

6827

0.62

7

சிவசங்கர்

சுயேட்சை

6583

10

6593

0.59

8

கண்ணதாசன்

சுயேட்சை

3485

17

3502

0.32

9

செல்வராஜ்

புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி

2943

14

2957

0.27

10

ஒச்சப்பன் S/o பன்னீர்செல்வம்

சுயேட்சை

2939

42

2981

0.27

11

பஞ்சவர்ணம்

சுயேட்சை

2561

11

2572

0.23

12

பாரிராஜன்

வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி

2493

4

2497

0.22

13

மலையாண்டி S/o பன்னீர்செல்வம்

சுயேட்சை

2387

15

2402

0.22

14

நவாஸ்கான்

சுயேட்சை

2301

22

2323

0.21

15

சிவானந்தம்

பகுஜன் சமாஜ் கட்சி

1958

56

2014

0.18

16

ஒய்யத்தேவர் மகன் பன்னீர்செல்வம்

சுயேட்சை

1920

9

1929

0.17

17

அபுபக்கர் சித்திக்

தேசிய மக்கள் சக்தி கட்சி

1497

21

1518

0.14

18

மணிவாசகம்

பகுஜன் திராவிட கட்சி

1392

11

1403

0.13

19

ஒய்யாரம் S/o பன்னீர்செல்வம்

சுயேட்சை

1369

7

1376

0.12

20

சலீம்

சுயேட்சை

961

13

974

0.09

21

சசிகனி

சுயேட்சை

896

3

899

0.08

22

சதுரகிரி

சுயேட்சை

815

12

827

0.07

23

சிக்கந்தர்

சுயேட்சை

804

19

823

0.07

24

விக்னேஷ்

சுயேட்சை

643

9

652

0.06

25

ஒச்சாத்தேவர் S/o பன்னீர் செல்வம்

சுயேட்சை

564

8

572

0.05

26

நோட்டா

None of the Above

6163

132

6295

0.57

Total

1102130

7723

1109853எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments