மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்று முடிந்தது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, கொமதேக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி எம்.பி. இந்த தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டார். பா.ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இவர்களைத்தவிர அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சந்திரபிரபா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். இதுதவிர சுயேச்சையாக பன்னீர்செல்வம் பெயருடைய 5 பேரும் களத்தில் இருந்தனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த தொகுதியில் போட்டியிட்டதால், தமிழகத்தின் கவனம் ஈர்த்த தொகுதியாக இராமநாதபுரம் தொகுதி இருந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த 2024 இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் 2305 பதிவாகிய ஓட்டில் நவாஸ் கனி 2135 வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாக வெற்றி கனி பறித்த நவாஸ் கனி பா.ஜனதா அணி சார்பில் சுயேட்சையாக நின்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கோபாலப்பட்டிணத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை- 3629
கோபாலபட்டிணத்தில் நான்கு வாக்குச்சாவடியிலும் மொத்தம் பதிவான வாக்குகள்- 2305
நவாஸ் கனி (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) பெற்ற வாக்குகள்- 2135 (92.63%)
மற்ற காட்சிகள் பெற்ற வாக்குகள்- 170 (7.37%)
பதிவான மொத்த வாக்குகள்- 2305
பூத் வாரியாக பதிவான வாக்குகளின் விபரம்:
149 பூத்:
பதிவான வாக்கு- 614
நவாஸ் கனி (ஏணி)- 555
மற்றவை- 59
150 பூத்:
பதிவான வாக்கு- 529
நவாஸ் கனி (ஏணி)- 484
மற்றவை- 45
151 பூத்:
பதிவான வாக்கு- 631
நவாஸ் கனி (ஏணி)- 586
மற்றவை- 45
152 பூத்:
பதிவான வாக்கு- 531
நவாஸ் கனி (ஏணி)- 510
மற்றவை- 21
இராமநாதபுரம் வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை:
வேட்பாளர்கள் வாக்குகள் விவரம்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்: 16,17,688
பதிவானவை: 11,06,838
நவாஸ் கனி (469943 வாக்கு) அவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் BJP சார்பாக போட்டியிட்ட நைனார் நாகேந்திரனை (342821 வாக்கு) 127,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2024-ஆம் இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விட 39,660 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு சதவிகிதத்தில் 2019-ஆம் தேர்தலை (44.08%) விட இந்த தேர்தலில் (45.92) 1.84% சதவிகித வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.