கோபாலப்பட்டிணத்தில் இன்று ஜூன் 06 மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு




கோபாலப்பட்டிணத்தில் 06-06-2024 வியாழக்கிழமை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். 

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியிலான ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில், மீனவ கிராமங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்படவுள்ளன.

ஆய்வின் போது, நாட்டுப்படகு உரிமையாளா்களின் ஆதாா் அட்டை, படகு பதிவுச் சான்றிதழ், டீசல் மானிய அட்டை, ரேஷன் காா்டு, மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடா்பு சாதனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் மானிய டீசல் மற்றும் பதிவு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments