புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு




புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சார்பாக விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதேேபால் இந்த ஆண்டும் விசைப்படகுகள் ஆய்வு நடைபெற்றது. விசைப்படகுகள் ஆய்வு முடிவுற்ற நிலையில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள நாட்டுப்படகுகள் 2 நாள் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின்போது அதிகாரிகள் படகின் பதிவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து தரவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மீன்பிடிக்க தகுதியான கட்டமைப்பில் படகுகள் உள்ளதா என்றும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பதிவு செய்யப்படாத படகுகளுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments