புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்




புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுடன் தரையில் அமா்ந்து கலந்துரையாடினார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கவிநாடு கிழக்கு ஊராட்சி, ஆட்டாங்குடி கிராமத்தில் பொதுக்கழிப்பிட கட்டுமானப் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் செயல்பாடுகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் கணக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பார்வையிட்டார்.

சிரித்து பேசி மகிழ்ந்தனர்

அதன்பின்னர் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார். அப்போது குழந்தைகளிடம் பெயர் விவரம், எங்கிருந்து வருகிறீர்கள், சாப்பாடு நன்றாக உள்ளதா? என கேட்டார். இதற்கு குழந்தைகள் பதில் அளித்தனர். அப்போது கலெக்டருடன் குழந்தைகள் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.

அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள், குழந்தைகளின் வருகை பதிவேடுகள், குழந்தைகளின் வயதிற்கேற்ற உடல் எடை, உயரம் குறித்தும், குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான இட வசதிகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பரமசிவம், உதவி செயற்பொறியாளர் அல்லி, உதவிப்பொறியாளர் கண்ணகி சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராகாந்தி, வேலு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments