இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், ராமேசுவரத்துக்கு அகதிகளாக வந்தனர். அங்குள்ள ஒரு டீக்கடையில் நின்றிருந்தவர்களை போலீசார் மீட்டனர்.
இலங்கை அகதிகள்
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு அவ்வப்போது அகதிகளாக வருகின்றனர்.
இந்த நிலையில், ராமேசுவரம் சேரான் கோட்டை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் சிலர் படகு மூலம் வந்து இறங்கி இருப்பதாக கியூ பிரிவு மற்றும் கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கடற்கரை கிராமத்தில் உள்ள டீக்கடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண், பெண், 3 சிறுமிகள், ஒரு சிறுவன் என 6 பேர் நின்றிருந்தது தெரியவந்தது.
டீக்கடையில் நின்றிருந்தனர்
6 பேரையும் மீட்ட போலீசார், தங்களது வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அகதிகளாக இலங்கையில் இருந்து 6 பேரும் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இலங்கை முல்லைத்தீவு இந்துபுறம் பகுதியை சேர்ந்த சிவராஜா (வயது 45), அவருடைய மனைவி ஜெயகவுரி(45), இவர்களுடைய பிள்ளைகள் கீர்த்தனா(16), ஆர்த்தி(14), சஞ்சய்(11), சங்கவி (9) ஆகியோர் என்று தெரிய வந்தது.
குடும்ப சூழ்நிலையாலும், கடன் தொல்லையாலும் இலங்கையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குழந்தைகளை இங்குள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்காக இலங்கையை சேர்ந்த படகோட்டிக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து ஒரு பிளாஸ்டிக் படகு மூலம் இங்கு தப்பி வந்ததாக தெரிவித்தனர். இலங்கையை சேர்ந்த அந்த பிளாஸ்டிக் படகு, இந்திய கடல் எல்லையை தாண்டி வந்து ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாம் அருகே உள்ள சேரான்கோட்டை கடற்கரையில் அகதிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இது உளவுப்பிரிவு போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.