இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி 2024: கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்!






மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்று முடிந்தது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, கொமதேக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிட்டார்.

இந்த நிலையில் கடந்த ஜூன்.4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக நவாஸ்கனி எம்.பி. இந்த தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்டார். பா.ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இவர்களைத்தவிர அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சந்திரபிரபா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். இதுதவிர சுயேச்சையாக பன்னீர்செல்வம் பெயருடைய 5 பேரும் களத்தில் இருந்தனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த தொகுதியில் போட்டியிட்டதால், தமிழகத்தின் கவனம் ஈர்த்த தொகுதியாக இராமநாதபுரம் தொகுதி இருந்தது.

இந்நிலையில் நடந்து முடிந்த 2024 இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் 2305 வாக்குகள் பதிவாகியதில் நவாஸ் கனி 2135 வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாக வெற்றி கனி பறித்த நவாஸ் கனி பா.ஜனதா அணி சார்பில் சுயேட்சையாக நின்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக பெற்ற வாக்காளர்களின் விபரம்:

1.நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)- 2,135 வாக்கு

2.சந்திரபிரபா (நாம் தமிழர்) - 95  வாக்கு

3.ஜெயபெருமாள் (அ.தி.மு.க.)- 27 வாக்கு

4.முவித்குமார் (சுயே)- 19 வாக்கு

5.ஓ.பன்னீர்செல்வம் (பா.ஜனதா அணி சார்பில் சுயே.)- 9 வாக்கு






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments