தமிழகம் முழுவதும் அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது சில நாட்களாக வானிலை அப்படியே எதிர் மாறாக வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும், தூரல் மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் அளவு பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் குறைந்து 27 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் இந்த வாரம் மிதமான மழை மற்றும் வாரத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் கனமழை வரை அதாவது 60 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இருந்தே பலத்த காற்றுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை வரை பெய்ததை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசும் என்றும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்ததை தொடர்ந்து தற்போது நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி உள்ள நிலையில் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 05.06.2024 புதன்கிழமை இரவு 9 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து மழை நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது.
மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தற்போது பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.