தொண்டி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை




தொண்டி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

தொண்டியில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கோரிக்கை விடுத்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கால்நடைகள் வளர்ப்போர் அவற்றை வீடுகளில் கட்டி போடாமல் இருப்பதே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் இரவு பகலாக மாடுகள் சுற்றித் திரிகின்றன.

உயிரிழப்புகள்

மேலும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் மாடுகள் படுத்து தூங்குவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால் பலர் காயமடைகின்றனர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை தொடர்ந்து சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதித்தும் கால்நடைகளை அதற்கான பாதுகாப்பு கொட்டகையில் அடைத்து வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு கால்நடைகள் வளர்ப்போர் கட்டுப்படாததால் பேரூராட்சியில் மூலம் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

கோரிக்கை

தற்போது மீண்டும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் கால்நடைகள் கூட்டமாக இருப்பதும் நடமாடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments