தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) சாலையோரம் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய‌ விபத்தில் சிறுவன் பலி, நண்பனுக்கு கால்முறிவு




ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனும் அவனது நண்பனான 14 வயது சிறுவனும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதி, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தொண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 14 வயது சிறுவன் கால் முறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments