குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 166 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை எழுத 45 ஆயிரத்து 355 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் வர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்தனர். இருப்பினும் ஒரு சிலர் காலதாமதமாக வந்தனர். ஆனால் அவர்களை தேர்வு மையத்தின் உள்ளே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி சென்றனர்.
36,333 பேர் எழுதினர்
இதற்கிடையில் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி அளவில் முடிவடைந்தது. பகல் 12.45 மணிக்கு தேர்வு மையத்தில் இருந்து தேர்வர்கள் வெளியே வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை 36 ஆயிரத்து 333 பேர் எழுதினர். 9 ஆயிரத்து 22 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இத்தேர்வு 166 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாலும், 12 கண்காணிப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை 177 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து, தேர்வு நடைமுறைகள் குறித்து வீடியோ பதிவு செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்பட 3 மையங்களில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் மெர்சிரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தேர்வு குறித்து தேர்வர்கள் சிலர் கூறுகையில், தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே தொடர்ந்து இத்தேர்வுக்காக தயாராகி வந்தவர்கள், கேள்விகளுக்கான பதிலை எளிதாக எழுதியிருப்பர் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.