தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய வாட்ஸ்-அப் சேனல் தொடக்கம்




தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் புதிய வாட்ஸ்-அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் அனைத்து திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடைவதற்காக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யு-டியூப் போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ வாட்ஸ்-அப் சேனல் "TNDIPR, Govt. of Tamil Nadu" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள துலங்கல் குறியீடு (கியூ-ஆர் கோட்) ஸ்கேன் செய்ய வேண்டும்.மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments