அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 13-ந் தேதி வரை கால நீட்டிப்பு
அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

13-ந்தேதி வரை நீட்டிப்பு

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் கடந்த 7-ந் தேதி என தெரிவிக்கப்பட்ட நிலையில் வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு புதுக்கோட்டை, விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2024 All Rights Reserved. Powered by Summit
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments