ஆலங்குடி அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்




ஆலங்குடி அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் மோட்டார்கள் பழுது

கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் தெக்கிப்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைவதால் அப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் நவாமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்மா, ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments