என்னது நம்ம அறந்தாங்கி ரயில் வழித்தடத்தில் இத்தன ரயில்களா..................




திருவாரூர் - காரைக்குடி ரயில் வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக  21-06-2024 முதல் வாரத்தில் அனைத்து நாட்களும் விரைவு ர‌யி‌ல் சேவை இயங்கும் தடமாக செயல்பட உள்ளது.


இயங்கும் விரைவு ரயில் சேவைகள் :

தினசரி 

வண்டி எண் 06197 /06198 திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் விரைவு ர‌யி‌ல்கள்.

ஞாயிறு

வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ர‌யி‌ல்கள்.

திங்கள்

வண்டி எண் 06051/06052 தாம்பரம் - ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில்கள்.

வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்கள்.

செவ்வாய்

வண்டி எண் 16361 /16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ர‌யி‌ல்கள்

புதன்

வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்கள்.

வியாழன்

வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

வண்டி எண் 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.

வெள்ளி

வண்டி எண் 07696 ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

வண்டி எண் 06069 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரயில்

வண்டி எண் 20683 /20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில்கள்.

சனி

வண்டி எண் 06051 /06052 தாம்பரம் - ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ர‌யி‌ல்களும் சிறப்பு விரைவு ர‌யி‌ல்களும் நிரந்தர தினசரி சேவைகளாக இயக்கிட தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தடத்தில் உள்ள பயணிகள் ரயில் சேவைகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அது விரைவில் சாத்தியமாகும்.

பல புதிய விரைவு ரயில் சேவைகளை வலியுறுத்தி பெற்றிட முடியும்.

News Credit : Alathambadi Venkatesan

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments