புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் வீரமங்கலத்தைச் சேர்ந்த குமார் கணேசன் இம்மாதம் 10ம் தேதி வேலை தேடி அமீரகத் தலைநகர் அபுதாபி வந்தடைந்தார்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக அமீரகம் வந்தடைந்த அடுத்த நாள் (ஜூன் 11ம் தேதி) மாரடைப்பால் காலமானார். மறைந்த குமார் கணேசனின் உடலை தாயகம் அனுப்பித் தருமாறு, குமார் கணேசனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அமீரகத் தாய்ச் சபை அய்மான் சங்கத்தை அணுகினர்.
மறைந்த உடலை சகோதரரின் தாயகம் அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு தமுமுக அபுதாபி மண்டல பொருளாளர் எமனேஸ்வரம் சர்புதீன் கேட்டுக்கொண்டதன் பேரில் அனைத்து தூதரகப் பணிகளையும் அய்மான் சங்கத் தலைவர் கீழக்கரை எச்எம் முகம்மது ஜமாலுதீன் ஆலோசனையின் பெயரில், மறைந்த குமார் கணேசனின் நண்பர் சென்னை இர்பான் தாஜுதீன் அவர்களுடன் இணைந்து தேவையான அனைத்துக் காரியங்களையும் அய்மான் சங்க நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் (விகிரி) நிறைவு செய்தார்.
அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து. நேற்று 21/06/2024 இரவு அபுதாபி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்
திருச்சி விமான நிலையத்துக்கு மறைந்த சகோதரரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
மறைந்த குமார் கணேசனின் குடும்பத்தாரும் நண்பர்களும் தமது உளமார்ந்த நன்றிகளை அய்மான் சங்கத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர்.
அன்னாரின் இறுதிக் காரியங்களை நிறை வேற்றுவதற்கு உழைத்த பொதுச் செயலாளர் லால் பேட்டை அப்பாஸ் செயற்குழு ஆடுதுறை முஹம்மது மிஸ்பாஹி, உறுப்பினர்கள் முஹம்மது அனஸ், கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம், அம்பகரத்தூர் முஹம்மது கைசர், திருநெல்வேலி முகம்மது உசைன், கீழக்கரை சையது பாசில் அவர்களுக்கும், மேலும் அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், குமார் கணேசனின் உடலை தாயகம் அனுப்புவதற்கான முழுச் செலவையும் ஏற்ற அபுதாபி இந்திய தூதரகத்திற்கும், மிகத் துரிதமாக முழு ஒத்துழைப்பு வழங்கிய அபுதாபி இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி பாலாஜி ராமசாமிக்கும் அய்மான் சங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.