சிறந்த சமூக சேவகர்-தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு!சிறந்த சமூக சேவகர்-தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களில் தகுதியான நபர்களிடமிருந்து வருகிற 20-ந் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற தமிழக அரசின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments