பெருநாவலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுபெருநாவலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

அதன்படி முதலாம் ஆண்டு மொழிப்பாடத்திற்கான தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

 கலந்தாய்வில் தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ஆங்கில துறை தலைவர் கணேசன், வணிகவியல் துறை தலைவர் சீனிவாசன், இயற்பியல் துறை தலைவர் டேவிட் கலை மணிராஜ், கண்ணையா, கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments