ஊராட்சி தொடக்கப்பள்ளியை சூறையாடிய மர்ம ஆசாமிகள்! போலீசார் விசாரணை!!



புதுக்கோட்டையில் ஊராட்சி தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 62 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு பள்ளியின் கதவை பூட்டி விட்டு ஊழியர்கள் தங்களது வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இரவு அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பள்ளியை சூறையாடினர். மேலும், பள்ளியில் வைத்திருந்த பெரிய அளவிலான டி.வி.யை எடுக்க முயன்றனர். ஆனால் அது வராததால் அதை உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றனர்.

நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளியின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது டி.வி. உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் 5 மின் விசிறிகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியை சூறையாடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம ஆசாமிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments