ஜெ.ஜெ. கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில்‌ சேர விண்ணப்பிக்க அழைப்பு!



ஜெ.ஜெ. கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில்‌ சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின்‌ மூலம்‌ 2024-25-ம்‌ கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெறும்‌ முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில்‌ சேருவதற்கான விண்ணப்பங்கள்‌ இணைய வழி மூலம்‌ வரவேற்கப்படுகின்றன. 

அதன்படி பிளஸ்-2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இதற்கு 1-8-2024 அன்று குறைந்தபட்சம்‌ 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்‌. அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சியானது தமிழ்‌ வழியில்‌ மட்டுமே நடத்தப்படும்‌. தேர்வுகளை தமிழில்‌ மட்டுமே எழுத வேண்டும்‌. இப்பயிற்சிக்கு www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்‌ ரூ.100 இணைய வழியில்‌ செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்‌. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌ ஜூலை மாதம் 19-ந் தேதி பிற்பகல்‌ 5 மணி வரை ஆகும். பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலிக்கப்படும். அதன்பின்னர்‌ பயிற்சியில்‌ சேருவதற்கு தகுதி பெற்றவர்களின்‌ விவரம்‌ பயிற்சி நிலையத்தின்‌ மூலம்‌ தெரிவிக்கப்படும்‌. தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள்‌ ரூ.18,750-ஐ ஒரே தவணையில்‌ இணையவழி மூலம்‌ மட்டுமே செலுத்த வேண்டும்‌. 

மேலும்‌ விவரங்களுக்கு கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின்‌ அலைபேசி எண்களில்‌ 9443587759, 9486045666 தொடர்பு கொள்ளலாம்‌ என மாவட்ட கூட்டுறவு சங்கங்களின்‌ மண்டல இணைப்பதிவாளர்‌ ஜீவா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments