புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதல் & விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான செயலை தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே I.A.S அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்த காவல்துறையினர்களுக்கு உத்தரவு.






புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளசாராயம்  காய்ச்சுதல் & விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான  செயலை தடுப்பதற்காக  புதுக்கோட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  I.P.S அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிரடி  சோதனை நடத்த காவல்துறையினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பது தொடர்பாக பல்வேறு ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே மரக்கானம் பகுதியில் கள்ளச்சாராயத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த சுவடு ஆறுவதற்குள் தற்போது சுமார் 40 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளசாராயம்  காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதமான  செயலை தடுப்பதற்காக  புதுக்கோட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப.,  அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிரடி  சோதனை நடத்த காவல்துறையினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments