மீமிசலில் இன்று ஜூலை 16 மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாம் நடைபெறுகிறது பொதுமக்கள் பயன்பெற அழைப்பு






 புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இன்று ஜூலை 16 மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாம்   பொதுமக்கள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது 

முதல் அமைச்சரின் முகவரித்துறை சார்பில், `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் ஜூலை 11-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உப்பளம் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் காலை 10.00 முதல் 3.00 மணிவரை  நடைபெறவுள்ளது

துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்,

எனவே மேற்காணும் மக்களுடன் முதல்வர் முகாமில் தாங்கள் பங்கேற்று தங்கள் வார்டு பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் வழங்கிடவும் தங்களது மேலான ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் அந்த அந்த ஊரில் உள்ள பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஊருக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக எழுதி M.L.A விடம் வழங்கும்படி GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments