தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென்று உயர்ந்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
மின் கட்டணம் திடீர் உயர்வு
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து வருகிறது.
இந்தநிலையில் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று இரவு அறிவித்தது. இந்த புதிய மின் கட்டண உயர்வு கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வீடுகளுக்கு...
* 400 யூனிட் வரை உள்ள வீட்டு பயன்பாடு மின்கட்டணம், இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 ஆக இருந்தது. தற்போது 20 பைசா உயர்ந்து, ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 401 முதல் 500 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 30 பைசா உயர்ந்து, ரூ.6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 40 பைசா உயர்ந்து, ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 601 முதல் 800 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 ஆக இருந்தது. தற்போது 45 பைசா உயர்ந்து, ரூ.9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 801 முதல் 1,000 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20 ஆக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து, ரூ.10.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* 1,000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இதுவரை யூனிட்டுக்கு ரூ.11.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 55 பைசா உயர்ந்து, ரூ.11.80 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள்
* அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது.
* கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ.9.35-ல் இருந்து ரூ.9.80 ஆக உயர்ந்திருக்கிறது.
* ரெயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்திருக்கிறது.
* குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95 ஆக உயர்ந்திருக்கிறது.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்திருக்கிறது.
* தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கான 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.70-ல் இருந்து ரூ.9.10 ஆக உயர்ந்திருக்கிறது.
கட்டுமான பணிகள்
* விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-ல் இருந்து ரூ.8 ஆக உயர்ந்திருக்கிறது.
* தொழில், ஐ.டி. நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்திருக்கிறது.
* கட்டுமான பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.12.25-ல் இருந்து ரூ.12.85 ஆக உயர்ந்திருக்கிறது.
மேற்கண்டவாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.