கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக செல்லும் மயிலாடுதுறை - திருச்சி இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வரும் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருச்சி-மயிலாடுதுறை இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வரும் ரயில், இனி தினசரி ரயிலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் இயக்கப்படும் நேரம் மற்றும் ரயில் நிறுத்தங்களில் மாற்றம் இல்லை
.
மயிலாடுதுறை-திருச்சி-மயிலாடுதுறை இடையே வாரத்தில் ஐந்து முறை இயங்கி வந்த ரயில் இனி தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது.
ரயில் சேவை:
நமது நாட்டின் பொது போக்குவரத்து சேவையில் முதல் மற்றும் முக்கிய பங்கு வகிப்பது ரயில் போக்குவரத்து நாள்தோறும் நாடு முழுவதும் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு வசதி குறைந்த கட்டணம் பாதுகாப்பு மற்றும் பயண வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக தொலைதூர பயணங்களுக்கு பொதுமக்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
ரயில் சேவை நீட்டிப்பு:
இந்த நிலையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களை மற்றொரு ஊருக்கு நீட்டித்து இயக்குவது, சிறப்பு ரயில்களை நீட்டித்து இயக்குவதும், புதிய சிறப்பு ரயில்களை அறிவிப்பது என தொடர்ந்து ரயில் பயணிகளின் நலனுக்காக ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் சென்னை கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி ரயில் நிலையம் பரபரபரப்பான ரயில் நிலைமையாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சியில் மயிலாடுதுறை ரயிலை தினசரி ரயிலாக நீட்டி இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வே மகிழ்ச்சி அப்டேட்:
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, "திருச்சி மயிலாடுதுறை திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் ரயில் எண் மற்றும் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை ரயில் தினசரி ரயிலாக மாற்றம்:
அதன்படி வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்பட்டு வந்த வண்டி எண்கள். 16233/16234 மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் இனி தினசரி ரயிலாக இயக்கப்படும்.
அந்த வகையில் வண்டி எண். 16233 மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் 16833 என மாற்றப்பட்டு தினசரி ரயிலாக இயக்கப்படும்.
மேலும் வண்டி எண். 16234 திருச்சிராப்பள்ளி மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 16834 என மாற்றப்பட்டு தினசரி ரயிலாக இயக்கப்படும்.
இந்த ரயில் இயக்கப்படும் நேரம் மற்றும் ரயில் நிறுத்தங்களில் மாற்றம் இல்லை" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.