கோட்டைப்பட்டினத்தில் மமக சார்பில் மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி ஜூலை.2 மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!




கோட்டைப்பட்டினத்தில் மமக சார்பில் மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி இன்று (ஜூலை.2) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மது வணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்த கோரி கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகில் இன்று 2/07/2024 மாலை 4.00 மணியளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா கண்டன உரை நிகழ்த்துகிறார்.

போதை ஒழிப்பு போராளிகள் அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments