திருமயம் ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் திறந்து வைத்தார்




திருமயம் ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 

பணி முடிவடைந்து பாப்பாவயல் பகுதியில் நீண்ட காலமாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை கடும் முயற்சிக்கு பிறகு ரூ.50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்டது. அதனை நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் இந்த சுத்தமான குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

இதனை தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று குடிநீரை குடங்களில் பிடித்து சென்றனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments