கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம் மிதமான மழை!




கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நெல்லை, ராமநாதபுரம், குமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 5.07.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து  மழை நீண்ட நாட்களுக்கு பிறகு  பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது.

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது.

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது.காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments