அமரடக்கி புன்னகை அறக்கட்டத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு




திருப்புனவாசல் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் உறுப்பினர் கண்ணமங்களம் சேர்ந்த M.முத்துவேல், பாக்கிய லெட்சுமி அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அமரடக்கி  புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் துரை. பிரபாகரன், சிவ.சண்முகம், அவர்கள் தலைமையில் தீயத்தூர் பள்ளி ஆசிரியர் சரவணன்,  புன்னகை அறக்கட்டளை நிறுவனர்  ஆ.சே.கலைபிரபு அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மரகன்றுகள் &  விழிப்புணர்வு வழங்கபட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் மரகன்றுகள்  நடவு செய்தனர்.

இதில்  பள்ளிஆசிரியர் ரெஜினா,  புன்னகை அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் K.S. ராஜ்குமார், நமசிவாயம், ராமு, மாகாலிங்கம், சண்முகம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments