புதுக்கோட்டை மாவட்டத்தில் 61 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் 15-ந் தேதி முதல் தொடங்குகிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 61 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் 15-ந் தேதி முதல் தொடங்குகிறது.

காலை உணவு திட்டம்

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்குவது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி கூறியதாவது:- ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

61 பள்ளிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 39 அரசு உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள 22 அரசு உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளிலும் என மொத்தம் 61 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான காலை உணவுகளை சரியான நேரத்திற்குள் வழங்கிட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) செந்தில் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments