புதுக்கோட்டையில் பட்டப்பகலில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடியவரை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). இவர் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகே மாட்டுத்தீவன கடையில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் கடைக்கு வருவதற்கு முன்பு காலை நேரத்தில் கூலி வேலைக்கும் சென்று வந்தார். நேற்று மதியம் கடையின் வெளிப்பகுதியில் உள்ள கல் மீது பிரகாஷ் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பிரகாசை திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் உடன் வந்தவர்களுடன் தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் பிரகாஷ் தரையில் கிடந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து, உயிருக்கு போராடிய பிரகாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கொலையான பிரகாஷின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர்.
முன்விரோதம்
இந்த கொலை வழக்கு தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த உறவினரை பிரகாஷ் தட்டிக்கேட்டு வந்ததில் முன்விரோதம் காரணமாக அவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தப்பி ஓடிய கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்த நிலையில் பிரகாசை கொலை செய்தவரை குடும்பத்தோடு கைது செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கொலையானவரின் குடும்பத்தினர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் மச்சுவாடியில் பிரிவு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் பட்டப்பகலில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.