மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு




மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வு நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடியில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்வினை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.  வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்வானது ஏழாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்விற்காக அனைத்து மாணவர்களும் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தினையும் புத்தக கண்காட்சியில் நல்ல புத்தகங்களை வாங்கி படிப்பதற்கு ஊக்கத்தையும் தருவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இந்நிகழ்வானது மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  இணைந்து நடத்தப்படுகிறது. 

இந் நிகழ்வில் மணமேல்குடி ஒன்றியத்திற்கு  உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகபிரியா, ஜெனிட்டா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments