AIUTUC சார்பில் கடலில் இரட்டை மடி வலை பயன்படுத்தக் கூடாது என்று மீமிசலில் கண்டன ஆர்ப்பாட்டம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில்AIUTUCகட்சி சார்பில்எஸ்எஸ் யூ சி ஐ கட்சியின் ஆவுடையார் கோவில் பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

கடலில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வளையை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துகின்றனர்.அந்த இரட்டை மடி வலையில் கடலில் மீன் இனத்தின் முட்டைகள் உள்பட அனைத்தையும் இரட்டை மடிவலைஅறிந்து வந்துவிடுவதால் மீன் இனம் இனப்பெருக்கம் செய்ய இயலாமல் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவது குறித்தும், மீனவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட சுனாமி வீடுகள் பழுதடைந்துவிட்டதால் அவர்களுக்கு அவருடைய வீடுகளை மறாமத்து செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

எனவே மீன்வளத்துறை மற்றும்அரசு உடனடியாக மீனவர்களின் வாழ்வாதாரத்தைஅழிக்கும் இரட்டை மடி வளையை பயன்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும். இனிமேல் இரட்டை மடி வளை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று 50க்கும் மேற்பட்டAIUTUCகட்சியினர் மீமிசல் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணியைமீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments