எலி மருந்து பேஸ்ட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்துகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலிவிஷம், கரப்பான் கொல்லிகள், கொசு விரட்டிகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-ன்படி குற்றமாகும்.
வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கடைகளில் விற்க உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கு தேவையான உரிமத்தினை பெறத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரூ.500 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7,500 செலுத்தியும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லி மருந்திற்கு ரூ.100 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1,500 செலுத்தியும் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.
எலி மருந்து
எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் பேரங்காடிகளின் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினை அணுகி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-ன்படி உரிய பதிவேடுகளையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும்.
பற்பசை வடிவில் (பேஸ்ட்) விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது, ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு விற்க கூடாது
விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.