தொண்டி பேரூராட்சியில் கடற்கரை பூங்கா, நடைபாதை அமைக்க மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆய்வு




தொண்டி பேரூராட்சியில் பிரபாகரன் பீச் கடற்கரையில் ரூ.2.60 கோடி மதிப்பில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்ட மதிப்பீடு தயார் செய்து சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் தொண்டியில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்படும் என மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, பொறியாளர் அகமது ஆகியோர் தொண்டியில் கடற்கரை பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பேரூராட்சியின் திட்ட மதிப்பீடுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments