புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் நேற்று மக்களுடன் முதல்வர் முகாமிற்கு சென்று கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் மனுக்களை வழங்கினார்கள்.
மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று 16.07.2024 செவ்வாய்க்கிழமை மீமிசலில் நடைப்பெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் என பலரும் பங்கேற்றார்கள். இந்த முகாமில் பங்கேற்று பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு உடனடியாக தீர்வுகள் கிடைக்கப்பெற்றன.
அந்த அடிப்படையில் கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக மக்களுடன் முதல்வர் முகாமிற்கு நேற்று சென்று பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் என இரண்டு மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் கொடுத்தார்கள். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உங்களுடைய கோரிக்கைகளையும் புகார்களும் விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் சார்பாக வைக்கப்பட்ட 5 கோரிக்கைகள்
1. கோபாலபட்டினத்தில் பல வருடங்களாக குப்பை கொட்ட இடமில்லாததால் குப்பைகள் ஊர் முழுவதும் தேங்கி சாலைகளில் கிடக்கின்றன. அதனை உடனடியாக அகற்றி குப்பை கொட்டுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்பாடு செய்திட வேண்டியும் உடனடியாக அனைத்து குப்பைகளையும் அகற்றிட வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
2. வழிபாட்டுத்தலங்கள் (பள்ளிவாசல்கள்) அனைத்திற்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
3. கோபாலப்பட்டினத்தில் பட்டா இல்லாத வீடுகளுக்கு உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து பட்டா வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
4. கோபாலப்பட்டினத்தில் மிகவும் குறைந்த அளவில் நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. எனவே கூடுதலாக நீர் தேக்க தொட்டிகளை அமைத்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
5. கோபாலப்பட்டினத்தில் கழிவுநீர் கால்வாய் (பாதாள சாக்கடை) அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த 5 அம்ச கோரிக்கையை நேற்று மீமிசலில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் முகாமிற்கு சென்று கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் அரசு அதிகாரிகளிடம் மனுவை வழங்கினார்கள்.
கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நேற்று 2 புகார்கள் மனுவாக அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.
1. கோபாலபட்டிணத்தில் ஸ்டேட் பேங்க் முதல் கடற்கரை ஆலமரம் வரை பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை ஆனது பழுதடைந்து விட்டதால் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது அந்த சாலையானது போடப்பட்டது.ஆனால் அது தரமாக போடவில்லை அதுமட்டுமின்றி சாலைகள் குறுகி இருப்பதால் அதை உடனடியாக சரி செய்து தரமான சாலையாக அமைக்க வேண்டும்.
2. கோபாலப்பட்டினம் காவல் நிலையம் முதல் பழைய காலனி வழியாக ஊத்து வரை போடப்பட்டு வரும் சாலை பல மாதங்களாக கிடப்பில் கிடக்கின்றன அதை உடனடியாக சாலைகளை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் சார்பாக நேற்று மனு கொடுத்தார்கள் மனுவின் எதிரொலியாக தூங்கி கிடந்த சாலை பணி மீண்டும் இன்று துவங்கியது.
கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் இதே போன்று நமது ஊருக்கு தேவையான அரசு திட்டங்களை பெற்று உங்களுடைய அனைத்து சேவைகளும் மென்மேலும் நமது ஊருக்கு செய்திட GPM மீடியா அட்மீன் குழு சார்பாக மனதார வாழ்த்துக்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.