மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு?




மின்சார பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு மானியம் போக, நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை கூறப்படுகிறது. அதன்படி, 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு முற்றிலும் மின் கட்டணம் இல்லை. 200 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு, எஞ்சிய 100 யூனிட் மின்சாரத்திற்கு 245 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும்போதும் கட்டணம் உயர்கிறது.

தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் உண்மையில் மின் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் 846 ரூபாயும், கேரளாவில் 415 ரூபாயும், தெலங்கானாவில் 215 ரூபாயும், குஜராத்தில் 571 ரூபாயும், மகாராஷ்டிராவில் 732 ரூபாயும், உத்தர பிரதேசத்தில் 300 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே 200 யூனிட் மின்சாரத்திற்கு தமிழ்நாட்டில் 235 ரூபாயும், கர்நாடகாவில் 1,662 ரூபாயும், கேரளாவில் 880 ரூபாயும், தெலங்கானாவில் 545 ரூபாயும், குஜராத்தில் 1,157 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,246 ரூபாயும், உத்தரபிரதேசத்தில் 450 ரூபாயும் மின் கட்டணம் விதிக்கப்படுகிறது.

500 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு தமிழ்நாட்டில் 1,805 ரூபாயும், கர்நாடகாவில் 3,960 ரூபாயும், கேரளாவில் 3,065 ரூபாயும், தெலங்கானாவில் 2,890 ரூபாயும், குஜராத்தில் 3,065 ரூபாயும், மகாராஷ்டிராவில் 4,651 ரூபாயும், உத்தரபிரதேசத்தில் ரூ.2,900 வரையும் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதேபோல், 1000 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினாலும், தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவாக இருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments