கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளைகளுக்கு சமூக ஆர்வலர்கள் இணைந்து புத்தகம் வழங்கும் விழா




கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளைகளுக்கு சமூக ஆர்வலர்கள் இணைந்து  புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளைகளுக்கு‌சமூக ஆர்வலர்கள் இணைந்து  புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவை  அறக்கட்டளையின் தலைவர் இஸ்கந்தர் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்  திரு. காந்தி சுப்ரமணியன், ஐயா. திரு. பத்மநாபன், முன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் திரு. ஷேக் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் திராவிட ஆட்சியின் மூன்று முகம், அறிஞர் அண்ணா, அம்பேத்கர், யார் போட்ட பாதை, இந்திய இராணுவம் போன்ற தலைப்பில் அண்ணன் காந்தி சுப்பிரமணியன் மற்றும்  ஆவுடை யூனுஸ் சினியார் ஆகியோர் சுமார் பத்து புத்தகங்களை அறக்கட்டளைக்கு வழங்கினர்.

மேலும்  அலுவலகத்தை பொது நூலகத்துடன் கூடிய அலுவலகமாக செயல்பட வேணடுமென அண்ணன் காந்தி சுப்பிரமணியன் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். எங்களது அறக்கட்டளை நிர்வாகிகள் உடனடியாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க ஏற்பாடு செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் எங்களது அறக்கட்டளையின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவினை தமிழம்மா திருமதி. க. சண்முகவள்ளி தொகுத்து வழங்கினார்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments