நம்மில் பலரும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கண்டு வியப்படைந்திருப்போம். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவை துல்லியமாக பதில் அளிக்கும். தினசரி வேலைகளில் உதவும் "ChatGPT" போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன. இப்போது உங்கள் வாட்ஸ் அப்பிலும் AI அம்சம் கிடைக்கும் வகையில் மெட்டா நிறுவனம் தனது மெட்டா AI தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனால் என்ன பலன்கள்? இதை எப்படி பயன்படுத்துவது? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தற்போது நீங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் AI சாட்போட்டைப் பயன்படுத்தலாம். முன்னதாக Meta AI நியூசிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மட்டுமே கிடைத்தது.
How to use Meta AI on WhatsApp Facebook and Instagram
உங்கள் தினசரி பயன்பாடுகளில் Meta AI-ஐப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?:
பரிந்துரை: உங்கள் ஆர்வங்கள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய தகவல்கள்,வீடியோக்கள் மற்றும் பிற போஸ்டுகளைக் கண்டறிய Meta AI உங்களுக்கு உதவும்.
பல்வேறு மொழிகளில் படங்கள் மற்றும் டெக்ஸ்ட்ளை மொழிபெயர்த்தல்: வெளிநாட்டு நண்பர்களுடன் சேட்டிங் செய்யும்போது அவர்களுடைய மொழியைப் புரிந்து கொள்ள Meta AI உங்களுக்கு உதவும்.
படங்களை உருவாக்கலாம்: உங்கள் எண்ணங்களை டெக்ஸ்ட்(Text) வடிவில் என்டர் செய்தல் Meta AI உங்களுக்கு படங்களை உருவாக்கித் தரும்.
மெயில் எழுதுதல்: மெயில் எழுதுவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். இதுபோன்ற உதவியைப் பெறவும், நீங்கள் Meta AI-ஐப் பயன்படுத்தலாம்.
Meta AI ஐ எவ்வாறு பயன்படுத்துவது?:
வாட்ஸ்அப் செயலியைத் திறந்த பிறகு, கீழ் வலது மூலையில் அமைந்துள்ள "ப்ளூ ரிங்" ஐகானைக் காண முடியும்.
பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப்-ஐ அப்டேட் செய்த பிறகு, இந்த ஐகானைக் கிளிக் செய்தால், புதிய சாட் திறக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் கேள்விகளை நீங்கள் Meta AI-யிடம் கேட்கலாம்.
உங்கள் வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் Meta AI-ஐ எப்படி பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: வாட்ஸ்அப் அப்ளிகேஷனைத் திறக்கவும்.
ஸ்டெப் 2: 'Meta AI' ஐகானைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: முதல் முறையாக Meta AI-ஐ திறக்கும் போது, நிபந்தனைகள் காண்பிக்கப்படலாம். அவற்றைப் படித்துவிட்டு ஏற்றுக்கொள்ளவும்.
ஸ்டெப் 4: அதன் பின் நீங்கள் உங்களுடைய கேள்விகளை Meta AI-யிடம் கேட்கலாம். மேலும் உங்கள் கற்பனையில் இருக்கும் உருவத்தை டெக்ஸ்ட் வடிவில் என்டர் செய்து அனுப்பினால், அவை உங்களுக்கு படத்தை உருவாக்கித் தரும். Chat GPT-யிடம் கேள்விகள் கேட்பது போலவே, இதிலும் நீங்கள் கேட்கலாம்.
இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனில் Meta AI-ஐ எப்படி பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை திறந்து, யாருடனாவது நீங்கள் பேசிய சாட்-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: நீங்கள் வழக்கமாக பிறருக்கு மெசேஜ் அனுப்ப டைப் செய்யும் இடத்தில் "@" என்று டைப் செய்தால் Meta AI காண்பிக்கப்படும்.
ஸ்டெப் 3: அதன் பின் நீங்கள் உங்களுடைய கேள்விகளை Meta AI-யிடம் கேட்கலாம். மேலும் உங்கள் கற்பனையில் இருக்கும் உருவத்தை டெக்ஸ்ட் வடிவில் என்டர் செய்து அனுப்பினால், அவை உங்களுக்கு படத்தை உருவாக்கித் தரும்.
பேஸ்புக் மெசஞ்சரில் Meta AI-ஐ எப்படி பயன்படுத்துவது?:
ஸ்டெப் 1: பேஸ்புக் மெசஞ்சரைத் திறந்து, யாருடனாவது நீங்கள் பேசிய சாட்-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: நீங்கள் வழக்கமாக பிறருக்கு மெசேஜ் அனுப்ப டைப் செய்யும் இடத்தில் "@" என்று டைப் செய்தால் Meta AI காண்பிக்கப்படும்.
ஸ்டெப் 3: அதன் பின் நீங்கள் உங்களுடைய கேள்விகளை Meta AI-யிடம் கேட்கலாம். மேலும் உங்கள் கற்பனையில் இருக்கும் உருவத்தை டெக்ஸ்ட் வடிவில் என்டர் செய்து அனுப்பினால், அவை உங்களுக்கு படத்தை உருவாக்கித் தரும்.
உங்களால் இன்னும் உங்கள் வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் Meta AI ஐகானைப் பார்க்க முடியவில்லை என்றால், அப்ளிகேஷனை அப்டேட் செய்து மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.