புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பல்வேறு துறைகளின் பணிகள் சார்ந்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:-

மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் வெள்ளை கோடுகள் வரைதல், தேவையான இடங்களில் சரியான அளவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். பள்ளம் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். வாகனங்களில் ஒளிரும் நீல ஒளி உமிழ் விளக்குகளை தடுக்க வேண்டும். அதிகப்படியான சுமைகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள்

மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற இடங்கள் அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும். போதைப்பொருள் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் வரப்பெறும் புகார்கள் மீது உடனடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். அனுமதியின்றி உள்ள கடைகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும்.

அதிகாரிகள்

பொதுமக்களின் பாதுகாப்பு நலனில் மிகுந்த அக்கறைகொண்டு, அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments