புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சீபுரம் கமிஷனர்
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.பூங்கொடி அருமைக்கண், சேலம் மாநகராட்சி துணை கமிஷனராகவும், சேலம் துணை கமிஷனர் -1 பி.அசோக்குமார், சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், மதுரை மாநகராட்சி துணை கமிஷனர்-1 கே.சரவணன், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜி.தனலட்சுமி, ஈரோடு மாநகராட்சி துணை கமிஷனராகவும், காஞ்சீபுரம் மாநகராட்சி கமிஷனர் எம்.செந்தில் முருகன் சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரியாகவும், அப்பதவியில் இருந்த வி.நவிந்திரன் காஞ்சீபுரம் மாநகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் ஆர்.மகேஸ்வரி, புதிதாக உருவாக்கப்படும் நாமக்கல் மாநகராட்சி கமிஷனராகவும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.சித்ரா, புதிதாக உருவாக்கப்படும் காரைக்குடி மாநகராட்சி கமிஷனராகவும், கடலூர் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜன், புதிதாக உருவாக்கப்படும் திருவண்ணாமலை மாநகராட்சி கமிஷனராகவும், நெல்லை மாநகராட்சி துணை கமிஷனர் -1 ஏ.தாணுமூர்த்தி, தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், தாம்பரம் மாநகராட்சி துணை கமிஷனர்-2 கே.பாலு, திருச்சி மாநகராட்சி துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை கமிஷனர்
நகராட்சி நிர்வாக துணை இயக்குனர் எஸ்.லட்சுமி, வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும், தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராகவும், திருச்சி மாநகராட்சி துணை கமிஷனர் நாராயணன், புதிதாக உருவாக்கப்பட உள்ள புதுக்கோட்டை மாநகராட்சியின் கமிஷனராகவும், திருச்சி மாநகராட்சி துணை கமிஷனர் செல்வபாலாஜி, நகராட்சி நிர்வாக இணை இயக்குனராகவும், திருவண்ணாமலை நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, திருவேற்காடு நகராட்சி கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த கணேசன், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராகவும், நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னு கிருஷ்ணன், ஆவடி மாநகராட்சி உதவி கமிஷனராகவும், காரைக்குடி நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார் கொடைக்கானல் நகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி கமிஷனர் சியாமளா, மன்னார்குடி நகராட்சி கமிஷனராகவும், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ், தேனி-அல்லிநகரம் நகராட்சி கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த ஜஹாங்கீர் பாஷா ஊட்டி நகராட்சி கமிஷனராகவும், விழுப்புரம் நகராட்சி கமிஷனர் எச்.ரமேஷ், மறைமலைநகர் நகராட்சி கமிஷனராகவும், வேலூர் மாநகராட்சி உதவி கமிஷனர் எம்.ஆர்.வசந்தி, தாம்பரம் மாநகராட்சி உதவி கமிஷனராகவும், கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், விழுப்புரம் நகராட்சி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.