சென்னை கடற்கரை- காட்பாடி இடையே இயக்கப்பட உள்ள வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக முடிந்தது. சோதனையின்போது 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
வந்தே மெட்ரோ ரெயில்
இந்தியாவின் முக்கிய நகரங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கும் வகையில் பெரம்பூர் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் சென்னை-திருப்பதி, சென்னை கடற்கரை - காட்பாடி என 240 கிலோமீட்டருக்குள் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 12 பெட்டிகளை கொண்ட வந்தே மெட்ரோ ரெயிலில் ஏ.சி. வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் செல்போன் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் கண்காணிப்புக் கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை கடற்கரை-காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
சோதனை ஓட்டம்
அதன்படி, சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் வந்தே மெட்ரோ ரெயில் வில்லிவாக்கத்தில் இருந்து நேற்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தது. தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10 மணிக்கு அடைந்தது. அங்கு ரெயில்வே பாதுகாப்பு முதன்மை கமிஷனர் ஜனக் குமார் கர்க், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ஐ.சி.எப். அதிகாரிகள் ஆகியோர் ரெயிலில் ஏறினார்கள். தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு அந்த ரெயில் புறப்பட்டது.
வாலஜா ரோடு ரெயில் நிலையம்
சோதனையின் போது வந்தே மெட்ரோ ரெயில் 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. ரெயிலின் பாதுகாப்பு, அதிர்வு, வேகம் சிக்னல் தொழில்நுட்பம், ரெயில் நிலையங்களில் நடைமேடைகளில் சரியாக நிற்கிறதா ஆகியவை இந்த சோதனை ஓட்டத்தின்போது ஆய்வு செய்யப்பப்பட்டது.
சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததால் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் வரை வந்தே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. பின்னர், வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.