உலக சாதனைக்காக மண்டபத்தில் இருந்து சென்னை வரை கடலில் நீந்தும் மாற்றுத்திறனாளிகள் நேற்று - இராமேஸ்வரம் முதல் தொண்டி வரை இன்று - தொண்டி முதல் கட்டுமாவடி வரை




உலக சாதனைக்காக மண்டபத்தில் இருந்து சென்னை வரை கடலில் நீந்தும் சாகச பயணத்தை மாற்றுத்திறனாளிகள் தொடங்கினர்.

நீச்சல் சாகச பயணம்

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ்ரைடர்ஸ் விளையாட்டு குழுவும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் சாகச பயண நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரை பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நீச்சல் சாகச பயணத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக துணை தலைவர் தஜ்தீன், அக்ரோ எக்ஸ்போர்ட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஷாம்லால், ராமநாதபுரம் தெற்கு மாவட்ட மீனவர் பேரவை தலைவர் ரேமண்ட், விளையாட்டு இளைஞர் நல அலுவலர் தினேஷ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்டேடிய அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வரை

மண்டபத்தில் இருந்து 11 வயதில் இருந்து 31 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலை 6 மணிக்கு தங்கள் சாகச நீச்சல் பயணத்தை தொடங்கினார்கள். நேற்று மாலை 6 மணி அளவில் தொண்டியுடன் முதல் நாள் சாகச பயணத்தை நிறைவு செய்தனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து வரும் தேவகி பாலாஜி கூறுகையில், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மண்டபத்திலிருந்து சென்னை மெரினா வரையிலும் மாற்றுத்திறனாளிகள் 15 பேர் நீந்தி சாகச பயணத்தை தொடங்கியுள்ளனர்.

வருகிற 15-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இந்த சாகச பயணத்தை நிறைவு செய்கின்றனர். ஒரு நாளைக்கு 60 கி.மீ. தூரம் நீந்த உள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து தொண்டி வரை பயணத்தை நிறைவு செய்துள்ள இவர்கள் அடுத்த கட்டமாக தொண்டி முதல் கட்டுமாவடி என தொடர்ந்து நீந்த உள்ளனர். உலக கின்னஸ் சாதனைக்காகவும் இந்த நீச்சல் பயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.

© 2024 All Rights 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments