புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நிறைவு: ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை அரங்குகளை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்




புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நிறைவு பெற்றதில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது. அரங்குகளை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

புத்தக திருவிழா நிறைவு

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் புத்தக திருவிழா கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அறிவியல் பூர்வமான நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் பேசினர். இந்த நிலையில் புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவுக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பேசினார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ரூ.3 கோடிக்குபுத்தகங்கள் விற்பனை

விழாவில் அமைச்சர்ரகுபதி பேசுகையில், "புத்தக திருவிழாவில் கடந்த 10 நாட்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர். ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. புத்தக திருவிழாவுக்கு வந்தவர்கள் கல்வி செல்வத்தை தங்களது வீட்டுற்கு கொண்டு சேர்த்துள்ளனர்'' என்றார். விழாவில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், மன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக்தெய்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments