தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (தே.நெ.67)யில், துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் பணிகளை விரைந்து மேற்கொள்ள, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, (6.8.2024) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச் சாலையாக ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டுவிட்டது. துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, சுமார் 14.49 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ள பொது மக்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டதால், திருச்சி நகர் பகுதியில், நான்குவழிச் சாலையில் சேவைச் சாலை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.
துவாக்குடி மற்றும் பால்பண்ணை இடையே மொத்தம் 14.49 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்குவழி உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியது. ஏனெனில் இந்த சாலை திருச்சி மாநகரின் நகரப்பகுதிகளான திருவெறும்பூர், பாரத் கனரக எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை வளாகம், (BHEL) மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகம்(NIT) ஆகியவை உள்ளடக்கி அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களும் மற்றும் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் டாக்டர் ஆர்.செல்வராஜ், தேசிய நெடுஞ்சாலை அலகு தலைமைப் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சிறப்பு அலுவலர்(டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் ப.செல்வகுமார், மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.