புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி ⇋ காரைக்குடி பயணிகள் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மதுரை கோட்டத்தில் தொழில் நுட்ப பணிகள் காரணமாக ரயில் போக்கு வரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை - ராமநாதபுரம் (06653) இடையே ஆக. 5, 6, 8, 9, 11 ல் மதியம் 12:30 மணிக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் ரத்து செய் யப்படுகிறது. ராமநாதபு ரத்தில் இருந்து மதுரைக்கு (06654) காலை 11:00 மணிக்கு ஆக 5, 6, 8, 9, 11 ல் வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
குருவாயூரில் இருந்து இரவு 11:15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஆக. 4, 5, 8, 10 ல் செல்லும் விரைவு ரயில் (16128) விருதுநகர் வழியாக மாற்றி மானா மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை சென்று திருச்சிக்கு சென்றடை யும். மாற்று வழியில் செல் வதால் மானாமதுரை, காரைக்குடியில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து குருவாயூருக்கு ஆக. 8 காலை 9:45 மணிக்கு செல்லும் விரைவு ரயில் (16127) புதுக்கோட்டை வழியாக மாறி வந்து மானாமதுரை, விருதுந் கர் வந்தடையும். இந்த ரயிலுக்கும் காரைக்குடி, மானாமதுரையில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு ஆக. 8 மதியம் 12:00 மணிக்கு செல்லும் விரைவு ரயில் (16847) புதுக்கோட்டை வழியாக மாற்றி மானாமதுரை, விருதுநகருக்கு வந்தடை யும். மாற்று வழியில் செல்வதால் காரைக்குடி, மானாமதுரை ஸ்டேஷன் களில் கூடுதல் நிறுத்தங்கள் உண்டு.
திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு ஆக. 4, 11, 18, 25 தவிர ஆக.2 முதல் 31 வரை காலை 10:15 மணிக்கு செல்லும் ரயில் (06829) திருச்சி யில் இருந்து மதியம் 2:30 மணிக்கு தாமதமாக செல்லும்.
தினமும் காலை 10:15 க்கு திருச்சியில் இருந்து புறப்படும் காரைக்குடி டெமு ரயில் இன்று முதல் ஆகஸ்டு 31 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் 4 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2:30 க்கு புறப்படும்
பாலக்காடு டவுன் - திருச்சி வண்டிக்கு திருச்சி-காரைக்குடி இரயில் இணைப்பு ரயில் ஆகும்!
ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 31 வரை பாலக்காடு டவுனில் இருந்து தினசரி காலை 6:30 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடு, போத்தனூர், கோவை, பீளமேடு, திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, கொடுமுடி, புகலூர், கரூர், குளித்தலை வழியாக திருச்சிக்கு மதியம் 1.50 மணிக்கு வரும் 16844/பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லா விரைவு ரயில் உள்ளது. அங்கிருந்து புதுக்கோட்டை வருவதற்கு மதியம் 2:30 மணிக்கு இணைப்பு ரயில் உள்ளது. இந்த ரயில் புதுக்கோட்டைக்கு மாலை 3:25 மணிக்கு வந்து சேரும்.
இணைப்பு இரயில் குறித்த விவரம்
16844/பாலக்காடு டவுன் - திருச்சி முன்பதிவில்லா விரைவு இரயில்!
பாலக்காடு டவுன் - 06:30 am -
பாலக்காடு - 06:45 am
போத்தனூர்- 07:55 am - ₹110/-
கோயம்புத்தூர் - 08:10 am - ₹110/-
கோவை வடக்கு - 08:20 am - ₹110/-
பீளமேடு - 08:30 am - ₹105/-
திருப்பூர் - 09:10 am - ₹95/-
ஊத்துக்குளி - 09:25 am - ₹90/-
ஈரோடு - 10:30 am - ₹75/-
கொடுமுடி - 11:10 am -₹70/-
புகலூர் - 11:25 am - ₹65/-
கரூர் - 11:50 am - ₹60/-
குளித்தலை - 12:30 pm - ₹50/-
திருச்சி மலைக்கோட்டை - 01:32 pm
திருச்சி - 01:50 pm மதியம் வரும்
"திருச்சியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ள வேண்டும்"
06829/திருச்சி - காரைக்குடி இரயில்
திருச்சி - 02:30 pm மதியம் புறப்படும்
புதுக்கோட்டை - 03:23 pm வரும்
இந்த இணைப்பு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை (ஞாயிறு நீங்கலாக) மற்ற நாட்களில் கிடைக்கும்..
குறிப்பு: கட்டண விவரம் மேற்கண்ட இரயில் நிலையங்களில் இருந்து புதுக்கோட்டை வருவதற்கு நேரடி முன்பதிவில்லா டிக்கெட் விலை ஆகும். பயன்படுத்தி பயன்பெறுவீர்!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.