தொழில்முனைவோர் விருது
தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குகிறது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான அடுத்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
20-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 20-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.
மேலும், இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா துறை அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.