திருச்சி வழியாக செல்லும் கன்னியாகுமரி - ஹஜ்ரத் நிஜாமுதீன் டெல்லி இடையே இயங்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் எம்.பி.கோரிக்கை




திருச்சி வழியாக செல்லும் கன்னியாகுமரி - ஹஜ்ரத் நிஜாமுதீன்  டெல்லி இடையே இயங்கும்  திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார் 
 நெல்லைநாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்ராபர்ட் புரூஸ் நாடாளுமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:-

எனது முதல் உரையை எடுத்து வைப்பதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் போக்குவரத்துக்கு அதிகமாக பயன்படுத்துவது ரெயில்தான். கடந்த ஆண்டு மட்டும் 648 கோடி பேர் ரெயில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால் சமீப காலங்களில் ஏற்படும் விபத்துக்கள் மக்களை அச்சப்படுத்துகிறது. விபத்துகளில் இருந்து பாதுகாக்க ரெயில்வே பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கவில்லை என்பதை கோடிட்டு காட்ட விரும்புகி றேன்.

நெல்லை- குமரி இடையே ஒரு புதிய கோட்டம் அமைக் கப்பட வேண்டும். நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை ஒன்றிணைத்து திருநெல்வேலியில் ரெயில்வேகோட்டம் அமைத்து தரவேண்டும் என ரெயில்வே மந்திரிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மூத்த குடிமக்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அளித்து வந்த பயண கட் டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நாகர் கோவிலில் இருந்துதிருநெல்வேலிவழியாகடெல்லிசெல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒரு முறை இயக்கப்ப டுவதை தினசரி ரெயிலாக மாற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments